மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை. இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும்.